33,000 போயிங் விமான உற்பத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இரண்டாம் மாதமாக தொடர்கிறது
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் போராடி வரும் போயிங் விமான உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டம் இரண்டாவது மாதமாக தொடர்கிறது.
பணவீக்கம் பொருளாதார நெருக்கடி வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 40 சதவீத ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து 33 ஆயிரம் போயிங் விமான உற்பத்தி தொழிலாளர்கள் செப்டம்பர் 13 அன்று வேலை நிறுத்தத்தை துவங்கினர்.
இயந்திர வல்லுநர்கள் மற்றும் விண்வெளி பணியாளர்களின் சர்வதேச சங்கத்தின் தலைமையில் போயிங் உற்பத்தி தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் தற்போது 2 ஆவது மாதத்தை எட்டியுள்ள சூழலில் அமெரிக்க அரசாங்கமோ தொழித்துறையோ, தொழிலாளர்களுக்கு ஆதரவாக இறங்கி வர மறுத்தது.
கடந்த மாதம் போராட்டத்தில் உள்ள தொழிலாளர்களில் சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்களை அல்லது தொழிலாளர்களில் 10 சதவீதத்தினரை வேலையை விட்டு அனுப்ப போவதாகவும் போயிங் நிறுவனம் மிரட்டியது. நவம்பர் மாதம் முதல் 60 நாள் காலக்கெடு விதித்து இந்த பணி நீக்க கடிதத்தை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தது. இந்த மிரட்டலுக்கு அடிபணியாத தொழிலாளர்கள் போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.
இந்த ஓம் நீக்க நடவடிக்கைக்கு போயிங் தொழிலாளர்கள் சங்க தலைவர்களும் இயந்திர வல்லுநர்கள் மற்றும் விண்வெளி பணியாளர்களின் சர்வதேச சங்கத்தின் தலைமையும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
தொழிலார்களை கண்டுகொள்ளாத அமெரிக்க தொழிலாளர் நலத்துறை தற்காலிக செயலாளர் ஜூலி சு போராட்ட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து அக்டோபேர் 14 அன்று நேரடியாக போயிங் நிறுவனத்திற்கும் தொழிற் சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்தார்.
தொழிற்சாலை நிர்வாகம் 30 சதவீத ஊதிய உயர்வை மட்டுமே தர முடியும் என பிடிவாதம் பிடித்தது. இந்த சூழலில் அமெரிக்காவே பிரமிக்கும் வகையில் அக்டோபர் 15 அன்று 33 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி சியாட்டில் நகரில் நடைபெற்றது.
போயிங் நிர்வாகத்தின் பணி நீக்க அறிவிப்பை தொடர்ந்து அதனுடைய பங்கு 1.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.மேலும் தொழிலாளர்களின் போராட்டத்தால் 2025 ஆம் ஆண்டு டெலிவரி செய்ய வேண்டிய போயிங் 777, 737 மேக்ஸ், 767 ஆகிய ரக விமாமனைகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவற்றை டெலிவரி செய்ய 2026 வரை ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போராட்டதால் பல நூறு கோடி டாலர்கள் வரை தனக்கு இழப்பு ஏற்படுவதாக போயிங் நிறுவனம் தெரிவித்து வருகிறது.
தொழிலாளர்கள் கோரும் ஊதிய உயர்வு போயிங் நிறுவனத்தின் லாபத்தில் மிக மிக சிறு பகுதி மட்டுமே. ஆனால் போயிங் நிறுவனம் அதை மறுத்து வருகிறது.