ஒரு ஆண்டில் முற்றிலுமாக சிதைக்கப்பட்ட காசா
- அதிகாரப்பூர்வ விவரங்களின் படி 41,865 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- இதில் 17,000 குழந்தைகளும் 11,300 பெண்களும் அடங்குவர்.
- ஆனால் 1,18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா பகுதிக்கு வந்துள்ள அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- 26,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரை இழந்துள்ளனர்.
- தினமும் சராசரியாக 6 முதல் 8 குழந்தைகள் கை அல்லது கால்களை இழக்கின்றனர்.
- ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயம்
- இடிபாடுகளில் சிக்கியுள்ளவர் எண்ணிக்கை- 10,000 முதல் 12,000.
- கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்- 175, ஐ.நா ஊழியர்கள்- 125.
- பாலஸ்தீனத்தில் உள்ள 1245 மசூதிகளில் 962 மசூதிகள் தரைமட்டம்.3 தேவாலயங்கள் தகர்ப்பு
- மொத்தமுள்ள 60ல் 19 கல்லறைகள் அழிப்பு
- அனைத்து பல்கலைக்கழகங்களும் தகர்ப்பு. 344 பள்ளிகள் தகர்ப்பு.
- 60% வீடுகள் தரைமட்டம்
- 67% விவசாய நிலங்கள் பாதிப்பு
- 53% கிணறுகள் நாசம்
- 95% கால்நடைகள் உயிரிழப்பு
- காசாவின் 85% மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
- உலக வங்கியின் கணிப்பின்படி சுற்றுச்சூழல் சேதம் 411 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்)டாலர்.
- 39 மில்லியன் டன் போர் கழிவுகள் உருவாகியுள்ளன.
- எரிசக்தி, கடல்சார் சுற்றுச்சூழல், மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
- 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேத மடைந்துள்ளன.
- நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 2-8 லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கிறது.
- மாசுபட்ட நீரால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவியுள்ளன.
- இடிபாடுகளால் தூசி பரவி நுரையீரல் நோய்கள் தீவிரமடைந்துள்ளன.
- இடிபாடுகளில் 800,000 டன் அஸ்பெஸ்டாஸ் இருக்கலாம்.
- இடிபாடுகளை அகற்ற 513-647 மில்லியன் டாலர் செலவாகும்.
- சோலார் பேனல்கள் அழிவால் நச்சு பொருட்கள் வெளியேறியுள்ளன.
- 1,675 கிலோ ஈயம் சுற்றுச்சூழலில் கலந்துள்ளது.
- விவசாய துறை சேதம் 629 மில்லியன் டாலர்.
- மரங்கள், பசுமை இல்லங்கள், பாசன கட்டமைப்புகள் சேதம்.
- 38-48% மரங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டுள்ளன.
- விவசாய மண்ணில் கன உலோகங்கள் கலந்துள்ளன.
- கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது.
- காசாவின் ஒரே மின் நிலையம் சேதமடைந்தது.
- நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
- நீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது.
- கடலோர பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளன.
- வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- சுற்றுச்சூழல் சீரமைப்புக்கு பல ஆண்டுகள் ஆகும்.
- மேற்கு கரை பகுதியில் ஒரு வருடத்தில்
- 741 பேர் கொல்லப்பட்டனர்.
- 11,000 பேர் கைது- பெண்கள், சிறுவர்கள் உட்பட.
- 4க்கும் அதிகமான அகதிகள் முகாம் மீது 50 முறை குண்டு வீச்சு
- 1429 வீடுகள் தகர்ப்பு
- 50% சாலைகள் நாசம்
- லெபனானில் கடந்த 3 வாரங்களில்
- 2056 பேர் கொல்லப்பட்டனர்.
- இதில் 127குழந்தைகளும் 200பெண்களும் அடங்குவர்.
- 9000 பேர் படுகாயம்
- 34 மருத்துவமனைகள் தகர்ப்பு
- 73 மருத்துவ உழியர்கள் உயிரிழப்பு.
இது மட்டுமல்லாது சிரியா, ஈராக் மீதும் இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தி பலரை கொன்றுள்ளது. ஈரானில் புகுந்து, ஹமாஸ் தலைவரைப் படுகொலை செய்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரிட்டனும் அமெரிக்காவும் ஏமன் மீது குண்டுகளை வீசுகின்றன.
– அ.அன்வர் உசேன்