Tamil Marx

இந்திய பொருளாதாரம் வேலையின்மை

கொள்ளையடிப்பதை கற்றுக்கொடுக்கும் குற்றவியல் நர்சிங் பள்ளிகள் வேலையின்மையால் வன்முறைக்குள் தள்ளப்படும் இந்திய இளைஞர்கள்

கொள்ளையடிப்பதை கற்றுக்கொடுக்கும் குற்றவியல் நர்சிங் பள்ளிகள்  வேலையின்மையால் வன்முறைக்குள் தள்ளப்படும் இந்திய இளைஞர்கள்
  • PublishedSeptember 2, 2024

இந்திய இளைஞர்களுக்கு வேலையின்மையும், வறுமையும் பிரதான பிரச்சனைகளாக உள்ளன. மோடி அரசு வேலையின்மையை தீர்ப்பதற்கு பதிலாக கோடிக்கணக்கான வேலைகளை கொடுத்து இருப்பதாக திரிக்கப்பட்ட தரவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் வேலையின்மை, வறுமையை பயன்படுத்தி இந்திய இளைஞர்களை கொலை, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளாக சமூகத்தில் மேம்பட்ட பிரிவினரால் மாற்றப்பட்டு வருகிறார்கள்.இதற்காக சட்டவிரேதமாக சில கிராமங்கள் பயிற்சிப்பள்ளிகளாக இயங்கி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக ஆளக்கூடிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொலைதூரத்தில் உள்ளகி  காடியா, குல்கேடி, ஹல்கேடி  ஆகிய கிராமங்கள் குற்றவாளிகளின் “நர்சரிப் பள்ளிகள்” என பெயர் பெற்றுள்ளது.

மாநிலத் தலைநகரான போபாலில் இருந்து சுமார் 117 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமங்களில்  குழந்தைகளுக்கு “திருட்டு, உள்ளிட்ட கொள்ளையடிக்கும் செயல்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

12 – 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குற்றச் செயல்களை கற்றுக்கொள்ள வேண்டும் என குழந்தைகளின் பெற்றோரே இத்தகைய குற்றங்களை கற்றுக் கொடுக்கும் கிராமங்களுக்கு அவர்களை அனுப்புவதாகவும்  இந்த பயிற்சிக்கு  குழந்தைகளை சேர்ந்துவிடும் போது ஒவ்வொரு குடும்பமும்  ₹ 2 லட்சம் முதல் ₹ 3 லட்சம் வரை கட்டணம் செலுத்துகின்றனர்.

குழந்தைகள் முதல் முறையாக பள்ளி, கல்லூரி செல்லும் போதோ அல்லது விடுதிகளில் தங்கும்போதோ பெற்றோர் நேரில் பல இடங்களில் சென்று விசாரித்து ஒரு திருப்தியும் நம்பிக்கையும்  ஏற்படும் இடத்தில்  குழந்தைகளை சேர்த்து விடுவது இயல்பான வழக்கம்.

அதே போல் தான் இந்த குற்றச்செயல்களை கற்றுக்கொடுக்கும் தலைவர்களைச் சந்தித்த பிறகே பெற்றோர்கள் அங்கு எந்த கும்பலின் தலைவன் தங்கள் குழந்தைக்கு  சிறந்த முறையில் குற்றச்செயல்களை கற்றுத்தர முடியும் என்பதை முடிவு செய்கிறார்கள்.

இந்த குற்றவியல் நார்சரி பள்ளிகளாக உள்ள கிராமங்களில் குற்றச்செயல்களை கற்றுத்தரும் ஒவ்வொரு கும்பலும் தகளிடம் சேரும் குழந்தைகளுக்கு கூட்டமான இடங்களில் பைகளைப் பறிப்பது, பிக்பாக்கெட் அடிப்பது, காவலர்கள் லேபொதுமக்களிடம் சிக்கிக்கொள்ளமால் வேகமாக ஓடுவது,   பிடிபட்டால் அவர்கள் கொடுக்கும் தர்ம அடியை  தாங்குவதற்கு   தேவையான உடல் வலிமைக்கான பயிற்சிகளும், இரக்கமற்ற முறையில் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுவதற்கான அளிக்கப்படுகிறது.

ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு அந்தக் கும்பலின் தலைவனிடம் இருந்து குழந்தைகளின்  பெற்றோர்கள் ஆண்டுதோறும்  3 முதல் லட்சத்து 5 லட்சம் வரை வாங்கிக்கொள்கிறார்களாம்

இந்த கிராமங்களில்  பெற்ற பயிற்சிகளின் மூலமாக மிகவும் தந்திரமான திருடர்கள நிறைய பேர் உருவாகி சமூகத்தில் ஊடுருவி உள்ளார்கள். கடந்த காலங்களில் கூட அவர்களின் குற்றச் செயல்கள் இந்தியா முழுவதும் தலைப்புச் செய்திகளாக வந்துள்ளன.

சம்பவம் ஒன்று

2024 ஆகஸ்ட் 8 அன்று ஜெய்ப்பூரில் உள்ள ஹயாத் ஹோட்டலில் நடந்த ஆடம்பரமான திருமண விழாவில்,  ஒரு  திருடன் ₹ 1.5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ₹ 1 லட்சம் ரொக்கப் பையை எடுத்துச் சென்ற செய்தி வெளியானது.

அந்த திருட்டுக்கு பிறகு தப்பித்துக்கொள்ள  அந்த திருட்டு  கும்பல் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கடியா கிராமத்திற்கு தப்பிச் சென்றது. தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என அவர்கள் திருடிய பொருட்களை எப்போதும் போல வேகமாக கைமாற்றி விட்டனர்.

பிறகு  கன்வர் யாத்திரைக்குள் ( ஆர்எஸ்எஸ் பாஜக வால் கலவரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட யாத்திரை) புகுந்து தப்பிக்க முயன்றனர்.

கோடீஸ்வரர் வீட்டு திருமணத்தில் நடந்த திருட்டு சம்பவம் என்பதால் போலீஸ் விரைவாக விசாரணை செய்ததில் அவர்கள் தப்பிக்கும் முன் பிடித்து விட்டனர்.

18 வயதுக்கு குறைவான மைனர் திருடன் ஒருவனை பிடித்த போலீஸ் பிறகு முழு கும்பலையும் கண்டுபிடித்தது.

சம்பவம் இரண்டு

இதேபோல 2023 டிசம்பர் மாதம் 22 வயதான யாஷ் சிசோடியா, டெல்லியில் ஒரு திருமண விழாவில் நகை  பையைத் திருடிவிட்டு தப்பிச் சென்றான் இவன் ஒருவன் மீது மட்டும் பல்வேறு மாநிலங்களில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ஜெய்தீப் பிரசாத் கூறுகையில், ராஜ்கர் மாவட்டம் குற்றவாளிகள் தண்டனையின்றி செயல்படும் கிராமங்களுக்கு புகலிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதனை என்டிடிவி பதிவு செய்துள்ளது.

ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் என்னை தொடர்பு கொண்டு கோடீஸ்வரர் வீட்டு திருமணத்தில் நடந்த திருட்டை பற்றி பேசியபோது அந்த சம்பவத்தை செய்த குற்றவாளிகள் ராஜ்கரை சேர்ந்தவர்களாக தான் இருக்கும் என்று நாங்கள் நம்புவதற்கு நிறைய காரணங்கள் இருந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  கடியா, குல்கேடி, ஹல்கேடி ஆகிய  கிரமஙக்ளை “குற்றவியல் நர்சரிகள்”  என்று அவர் குறிப்பிட்டார்.

மொத்த கிராமத்தையும் வளைத்துப்போட்ட கும்பல்கள்

இந்த கிராம மக்கள் புதிதாக ஒருவர் கிராமத்திற்குள் நுழைந்தால் உடனடியாக செய்திகளை குற்றவியல் கும்பலின் தலைவர்களுக்கு தெரிவித்து விடுகிறார்கள்.

இந்த கிராமங்கள், நாடு முழுவதும் உள்ள காவல்துறைக்கு பெரிய குற்றங்களை செய்த குற்றவாளிகளைப் பிடிக்கும் ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளன.

இந்த கிராமங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மாநிலங்களில் திருமண விழாக்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக  என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

இந்த கும்பல்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவை எனவும் ஒவ்வொரு குற்றங்களைச் செய்வதற்கு முன்பும் புதுமையான தந்திரங்களை திட்டமிட்டு பயிற்சியும் செய்துகொள்கின்றனர் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏல முறையில் திருட்டில் பணியமர்த்தப்படும் குழந்தைகள்

கிராமத்தில் உள்ள செல்வந்தர்கள் பயிற்சிப்பெற்ற ஏழைக் குழந்தைகளை ஏல முறை மூலம் 1-2 வருடங்கள் வரை  இத்தகைய திருட்டு வேலைக்கு பணி அமர்த்துகிறார்கள்‌. இதன் மூலம் அவர்கள் 20 லட்சத்திற்கும் அதிகமான லாபத்தை சம்பாதிக்கிறார்கள்.

பயிற்சி பெற்றவுடன் இந்தக் குழந்தைகள் தாங்கள் கட்டிய கட்டணத்தை விட ஐந்து முதல் ஆறு மடங்கு லாபத்தை பெறுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் கும்பலிலிருந்து வெளியேறி சுயமாக பல திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த குற்ற நடவடிக்கையின் நெட்வொர்க் மிகப் பெரியது. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மீது நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 8,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக இந்த குற்றப் பள்ளிகளில் சேர்த்து விடப்படும் குழந்தைகள் கல்வி கிடைக்காத,குறைந்த கல்வியறிவு, வேலையின்மை , ஏழ்மையான குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களது மோசமான பொருளாதாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வசதி படைத்த பணக்காரர்கள் ஒன்றிணைந்து கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

source : NDTV

தமிழில் – தோழர் சேது சிவன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *