இவர்கள் மிக ஆபத்தானவர்கள் !
உத்திரப்பிரதேசம், சம்பல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அதற்காக தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினர் லஞ்சம் கொடுக்க திட்டமிடும் வீடியோவை ABC செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.
இவர்களின் நோக்கம் :
இஸ்லாமியர்கள் அதிகமுள்ள வாக்கு சாவடிகளில் கூச்சலும், குழப்பத்தையும் ஏற்படுத்தி பெண்கள் மற்றும் முதியோர்களை வாக்கு சாவடிகளுக்கு வர வரவிடாமல் செய்ய வேண்டும்.
அதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் நமக்கு சாதகமாக இருக்கவேண்டும் எனவே அவர்களை தேர்தலுக்கு முந்தைய நாளில் சந்தித்து அவர்களிடம் லட்சம் கொடுக்க வேண்டும்.
“அப்படி செய்யும் போது வாக்கு சதவீதத்தை குறைத்து பாஜகவிற்கு சாதகமான முடிகள் ஏற்படும் என்பதே நோக்கம்”
காரணம் :
அந்த தொகுதியில் வழக்கமாக சமாஜ்வாதி கட்சியே முன்னிலையில் இருந்துள்ளது, பாஜக இரண்டாவது இடத்தில் தான் உள்ளது எனவே தான் இவ்வாறு திட்டம் போட்டுள்ளனர்.
நோக்கம் நிறைவேறியதா?
வீடியோவில் பேசியுள்ள பாஜகவை சேர்ந்த புவனேஸ் குமார் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
மேலும் மே 7அன்று தேர்தல் நடந்த 10 தொகுதிகளில் சம்பல் தொகுதியில் தான் அதிகமாக 62% வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஆனால்,
சாம்பல் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பல வாக்கு சாவடிகளில் சலசலப்புகளும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
அவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்ட வாக்குச்சாவடிகளில் பெண்கள் மற்றும் முதியோர்கள் என பலரும் வாக்கு சாவடிக்கு வரவில்லை, குழப்பம் ஏற்பட்ட போது வாக்கு சாவடிகளில் இருந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் அவர்களும் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வரவில்லை என ABCன் கள ஆய்வு சொல்கின்றன.
இதெல்லாம் வைத்து பார்க்கும்போது, ஆம் அவர்களின் நோக்கம் நிறைவேறியது.
மிகவும் ஆபத்தானவர்கள் இவர்கள், எவ்வாறு :
இப்போது உங்களால் வீடியோவில் சதி திட்டம் தீட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேள்வியும் கேட்க முடியாது. வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என எதுவும் சுட்டிகாட்ட முடியாது. ஆனால் அவர்கள் திட்டம் தீட்டிய படி காரியமும் சாதித்து விட்டார்கள், என தான் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.