’’பஞ்சத்தின் பேரழிவை தவிர்க்க முடியாது” காசாவுக்கான உதவிகளை முடக்கும் ஏகாதிபத்தியம்.
சர்வதேச சட்டங்களை மீறி மருத்துவமனைகள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவுகள் தான் இவை. திட்டமிட்டு சுகாதாரநிலை அழிக்கப்பட்ட சூழலால் காசாவில் இஸ்ரேலின் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் பாலஸ்தீனர்கள் கொலையானதை விட அதிகமாக பாலஸ்தீனியர்கள் நோய்த்தொற்றுக்களால் கொலையாவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குண்டுவீச்சை நியாயப்படுத்துவது முதல் கண்மூடித்தனமாக மனிதாபிமான உதவிகளை முடக்குவது வரை இஸ்ரேல், அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகளின் மனிதாபிமானமற்ற தன்மைக்கு எல்லையே இல்லாமல் சென்று விட்டது. போர் நடந்து வரும் நான்கு மாதங்களில், இஸ்ரேல் ராணுவத்தால் காசாவில் 152 ஐ.நா. ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் அரசு பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்திவரும் வேளையில், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,கனடா உள்ளிட்ட 8 நாடுகள் ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பிற்கான நிதியுதவியை வெட்டியுள்ளன. காசாவில் உள்ள பாலஸ்தீனர்களின் உணவு, தற்காலிக தங்குமிடம் மருந்துகள் ஆகியவற்றிற்கான முக்கிய ஆதாரமே இந்நாடுகள் வழங்கிவரும் நிதியுதவிகள் தான். இந்நிலையில் ஏகாதிபத்திய நாடுகள் நிதி உதவியை வெட்டி காசாவில் தவிர்க்கவே முடியாத ஒரு கொடூர பஞ்சத்தை உருவாக்குகின்றன.
ஐ.நா. நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த உதவியின் அளவு என்பது கடலின் ஒரு துளி அளவுதான்.அதும் தடுக்கப்பட்டு விட்டதால் இப்போது நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.
ஏகாதிபத்திய நாடுகளின் நிதி வெட்டு அறிவிப்பு வந்தபிறகு காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது என ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் கூறினார். தற்போது பஞ்சம் தவிர்க்க முடியாத தாகிவிட்டது என்றும் பேசியுள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடுத்த வழக்கின் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட மறுதினம் ஐ.நா பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பின் பன்னிரெண்டு ஊழியர்கள் ஹமாஸ் குழுவின் தாக்குதலுக்கு உதவியதாக இஸ்ரேல் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதுகுறித்தான விசாரணை நிலுவையில் உள்ள சூழலிலேயே அந்த ஊழியர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும் அதனை காரணமாக பிடித்துக்கொண்டே இந்த நிதி வெட்டுக்களை இந்நாடுகள் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகாதிபத்திய நாடுகளின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பாசாங்குத்தனத்திற்கு எல்லையே இல்லாமல் சென்று அவர்கள் கைகளில் நாளுக்கு நாள் ரத்தக்கறை அதிகரித்து வருகிறது. இந்த பாசாங்குத்தனத்தின் வெளிப்பாடாக அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டுக்களை கேட்டு மிகவும் பீதியடைந்துள்ளதாக அறிவித்தது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை வைத்துக்கொண்டே மிக தீவிரமான பஞ்சத்தை இந்நாடுகள் உருவாக்கி வருகின்றன. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் இந்த நாடகங்களை சர்வதேச சட்டம் ‘கூட்டு தண்டனை’ என்று விவரிக்கப்படுகிறது. பன்னிரெண்டு ஊழியர்களின் நிருபிக்கப்படாத குற்றச் சாட்டுக்களை காரணம் காட்டி அகதிகள் நிவாரண அமைப்பின் நிதிகளை வெட்டுவது லட்சக்கணக்கான மக்களை தண்டிக்கும் செயல் ( கூட்டு தண்டனை ) ஆகும். இதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகள் பசி பஞ்சம் பட்டினியை பாலஸ்தீனர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவது அப்பட்டமாக வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனர்களை பலிகொடுப்பதில் மட்டுமே இந்த ஏகாதிபத்திய நாடுகள் குறியாக உள்ளன என்பதும் இவர்களின் கூட்டு தண்டனை மூலம் அறிய முடிகிறது. இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு காசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளையும் சுகாதார நிலையங்களையும் அழித்துள்ளது. தற்போது 4 சுகாதார நிலையங்கள் மட்டுமே சிறிதளவு இயங்கும் நிலையில் உள்ளது. 20 லட்சம் மக்கள் வாழ முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் நெருக்கடி மிகுந்த காசாவில் இடிப்பாடுகளில் கிடக்கும் பிணங்களாலும் மோசமான சுகாதார சூழலாலும் மிகமோசமான நோய்த்தொற்றுக்கள் உருவாகிறது.
சர்வதேச சட்டங்களை மீறி மருத்துவமனைகள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவுகள் தான் இவை. திட்டமிட்டு சுகாதாரநிலை அழிக்கப்பட்ட சூழலால் காசாவில் இஸ்ரேலின் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் பாலஸ்தீனர்கள் கொலையானதை விட அதிகமாக பாலஸ்தீனியர்கள் நோய்த்தொற்றுக்களால் கொலையாவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குண்டுவீச்சை நியாயப்படுத்துவது முதல் கண்மூடித்தனமாக மனிதாபிமான உதவிகளை முடக்குவது வரை இஸ்ரேல், அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகளின் மனிதாபிமானமற்ற தன்மைக்கு எல்லையே இல்லாமல் சென்று விட்டது. போர் நடந்து வரும் நான்கு மாதங்களில், இஸ்ரேல் ராணுவத்தால் காசாவில் 152 ஐ.நா. ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதல் குறித்து எந்த ஏகாதிபத்திய நாடுகளும் கூச்சலும் போடவில்லை. பாலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஐ நா அமைப்பின் பாதுகாப்பது பள்ளிகள் கட்டிடங்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி சர்வதேச விதிகளை மீறியதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இது குறித்தெல்லாம் எந்த ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்களும் வாய் திறக்கவில்லை.
ஆனால் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் தொடர்பு உள்ளது என்ற ஆதாரமற்ற குற்ற சாட்டை காரணமாக வைத்து லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களை பஞ்சத்தில் தள்ளி கொலை செய்கின்றன ஏகாதிபத்திய சக்திகள்.
கட்டுரையாளர்; சேது சிவன்