மோடி அரசை வீழ்த்துவோம்! கல்வியை பாதுகாப்போம்! பகுதி -3
1970 முதல் 54 ஆண்டுகளாக இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாய அறிவியல் பூர்வமான கல்வி கேட்டு போராடிவரும் இந்திய மாணவர் சங்கம் இந்திய கல்வியில் உரிய தலையீடுகளை செய்து நவதாராளமயம் மற்றும் கல்வி வணிகமும் மாணவர்களை விழுங்கிவிடாமல் பாதுகாத்து வருகிறது கல்விக்கான போராட்ட வரலாற்றிலிருந்தும் மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கை 2020 க்கு மாற்றான கல்விக் கொள்கை வரைவை முன்வைத்து புதிய கல்விக் கொள்கை 2020-யை எதிர்க்கிறது.
சிறுபான்மையினர் கல்வி மீதான தாக்குதல்மோடி பாஜக அரசு சிறுபான்மை மக்கள் மீதான பாசிச ஒடுக்குமுறையை அவர்களின் கல்வியிலும் தொடுத்து வருகிறது 2023 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மௌலானா அப்துல் கலாம் ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை கைவிடுவதாகவும் பிரீ மெட்ரிக் உதவித் தொகையை 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கைவிடுவதாகவும் ஒன்றிய அரசு கூறியது சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக உதவி தொகை வழங்க முடியாது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகை பயன்படுத்திக் கொள்ளலாம் என பதில் அளித்தது அதேபோல் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 சுட்டிக்காட்டி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அவர்களுக்கு கட்டாய கல்வி தரப்படுவதால் உதவித்தொகை தேவை இல்லை என்றும் கூறுகிறது ஆனால் சச்சார் கமிட்டி அறிக்கை இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் கல்வி நிலைமை மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்கள் கல்வி பெறுவதற்கு கூடுதல் உதவிகளை அரசு செய்திட வேண்டும் என்று முன்மொழிந்தது. இந்த கமிட்டி இந்தியாவில் இஸ்லாமியர்கள் சமூக பொருளாதார கல்வி நிலைமைகளை ஆராய்வதற்கு என்று பிரத்தியேகமாக இடதுசாரிகள் ஆதரவு காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டது. மேலும் இடதுசாரி கட்சிகளின் அழுத்தத்தால் தான் இந்த பிரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை சச்சார் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டது. இவை வெறுமனே கல்வியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சமூக பொருளாதார காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் மோடி அரசு சிறுபான்மை மக்கள் விரோத சிந்தனை காரணமாக இந்த கல்வி உதவித் தொகையை கைவிடுவது சிறுபான்மை மக்களின் கல்வி மீதான கொடூரமான தாக்குதல் ஆகும். மேலும் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிரான கல்வி வளாக வெறுப்பு பிரச்சாரம் என்பதும் இந்த காலகட்டத்தில் மோடி அரசால் திட்டமிட்டு அதிகமாக பரப்பப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்த பொழுது பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என கல்வி அமைச்சர் கூறி மிகப் பெரிய அதிர்வுகளை கர்நாடகா முழுவதும் ஏற்படுத்தினார். ஹிஜாப் அணிந்து மாணவிகள் கல்வி வளாகங்களுக்கு வந்தால் நாங்கள் காவிதுண்டு அணிந்து தான் கல்வி வளாகங்களுக்கு வருவோம் என்று கூறி ஆர்எஸ்எஸ் சங்க பரிவார் மாணவர்களை மத ரீதியாக பிளவு படுத்த முயற்சித்தது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் ஒரு ஆசிரியர் முஸ்லிம் மாணவரை நிற்க வைத்துவிட்டு முஸ்லிமல்லாத மற்றொரு மாணவரை இவர் இஸ்லாமியனாக இருப்பதால் இவனை நீ தாக்கு என்று பயிற்சி அளிக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளிவந்து மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு எதிரான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டிருப்பதன் மூலம் கல்வி நிலைய வளாகங்களுக்குள் சிறுபான்மையினர் வருவதையே தடுக்கும் விதமாக அச்சமூட்டுகின்றனர். இது இந்திய சமூகத்தில் ஏற்கனவே கல்வியில் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய ஒரு சமூகத்தை கல்வியே இல்லாத சமூகமாக மாற்றும் முயற்சியை தவிர வேறில்லை.வேந்தர் மற்றும் துணைவேந்தர்கள் அடாவடிதனங்கள்ஒன்றிய மோடி அரசு மாணவர்களின் அரசியல் செயல்பாடுகளையும் சிந்தனைகளையும் முடக்குவதற்காக இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்களை நியமிப்பது அதன் மூலம் மாணவர்களின் அரசியல் செயல்பாடுகளை முடக்குவது என மாணவர்களின் கல்வி வளாக ஜனநாயகத்தை ஒடுக்குகிறது. மோடி அரசு பல்கலைக்கழக மாணவர்கள் கன்னையாகுமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தேசத்துரோக வழக்கில் கைது செய்தது அதேபோல் 2016 ஆம் ஆண்டு ஏபிவிபி அமைப்பால் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நசீப் கான் என்ற மாணவன் தற்போது வரை உயிருடன் உள்ளாரா இறந்துவிட்டாரா என்பது கூட தெரியாத நிலையில் உள்ளது. தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட உமர் காலித் இன்னும் விடுதலை செய்யப்படாமல் 1000 நாட்களை கடந்தும் பிணை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. அவருக்கு எதிராக டெல்லி காவல்துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் புனையப்பட்ட ஆதாரங்கள் என்று கோர்ட் கூறியும் கூட அவருக்கு ஜாமீன் வழங்க முன்வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிஐஏ என்ஆர்சி என்பிஆர் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட ஏபிவிபி யை சார்ந்த நபர் சுதந்திரமாக டெல்லி மாநகரத்தில் உளவி வருகிறார். ஜே.என்.யு பல்கலைக்கழக துணைவேந்தர் தற்போது வரை மாணவர் ஜனநாயக பேரவை தேர்தலுக்கு அனுமதி வழங்க மறுக்கிறார் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என பகிரங்கமாக சுற்றறிக்கை மூலம் மிரட்டுகிறார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வேந்தர் மாணவர் ஜனநாயக பேரவை தேர்தலை முடக்குகிறார் பிறகு மாணவர் பேரவை தலைவரை தாக்கப்பட்டதற்கு கண்டிக்காமல் அவரை பதவி நீக்கம் செய்கிறார் இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஏபிவிபி மாணவர்களால் தாக்கப்படுவதை அமைதி காத்த அனுமதிக்கிறார் துணைவேந்தர்.தமிழகத்தின் வேந்தர் ஆர்.என் ரவி தமிழக அரசின் கொள்கை முடிவுகளை மீறி பல்கலைக்கழகங்களில் செயல்படுகிறார். துணைவேந்தர் நியமனம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா என எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை புறந்தள்ளி தான்தோன்றி வேந்தராக செயல்படுகிறார் பட்டமளிப்பு விழாக்களுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததன் மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை சிதைக்கிறார். கேரள பல்கலைகழகங்களின் வேந்தர் ஆரிப் முகமது கான் மாணவர் ஜனநாயக பேரவை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்தை மட்டுப்படுத்தும் விதமாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர்களாக ஏபிவிபி மாணவர்களை நியமிக்கிறார். போராடும் மாணவர்களை கிரிமினல் என குற்றம் சாட்டுகிறார் பாஜக ஆளாத மாநிலங்களில் வேந்தர்களைக் கொண்டும் மோடி அரசுக்கு எதிராக இடதுசாரி அரசியல் கருத்துக்கள் வலுவாக உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சங்க பரிவார துணைவேந்தர்கள் மூலமும் பல்கலைக்கழக செயல்பாடுகளையும் மாணவர்களின் சுயேட்சியான அரசியல் செயல்பாடுகளையும் முடக்குகிறது மோடி அரசு.சமூக நீதிக்கு எதிரான ஒன்றிய அரசுஇந்தியாவின் ஆய்வுகளை மேம்படுத்தவும் அறிவியல் வளர்ச்சி அதிகப்படுத்தவும் பாராளுமன்ற தனி சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஐஐடி ஐ.ஐ.எம் போன்ற ஒன்றிய அரசின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது பேராசிரியர் நியமனத்தின் போது இட ஒதுக்கீடு நடைமுறைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் உயர்கல்விக்கான நிதிகளில் பெரும் பங்கினை இந்த நிறுவனங்கள் தான் பெறுகிறது ஆனால் அனைத்து சமூக பின்னணியை சார்ந்தவர்களுக்கும் வாய்ப்பினை தரும் இட ஒதுக்கீட்டினை மறுக்கிறது வெறும் மெரிட் என்ற தட்டையான வாதத்தை கூறி இட ஒதுகீட்டை மறுக்கும் இந்நிறுவனம் மெரிட்டோரியலை நிரூபிப்பதில் தோல்வியடைகிறது. உலகில் தலைசிறந்த இந்திய ஆளுமைகள் அதிகமானோர் ஐஐடி, ஐஎம்மில் பயிலாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஆசிரியர்களில் வெறும் 3 விழுக்காடு குறைவானவர்கள் தான் எஸ்சி எஸ்டி வகுப்பை சார்ந்தவர்களாக உள்ளனர் இவை மாணவர்கள் சேர்க்கையிலும் எதிரொலிக்கிறது எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பை சார்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதே பெரும் சவாலாக உள்ளது அதில் கல்வி தொடர முடியாமல் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை எஸ்.சி எஸ்டி ஓபிசி வகுப்பை சார்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 13,600 பேர் எஸ்சி எஸ்டி ஓபிசி வகுப்பை சார்ந்தவர்கள் கல்வியை தொடர முடியாமல் ஐஐடி ஐஐஎம் மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். இவ்வளவு பெரிய அநீதியை மோடி அரசு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கு உயர் கல்வி நிறுவனத்தில் இழைத்து வருகிறது. மேலும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு இடையே வெஜ், நான் வெஜ் என்கின்ற உணவு பாகுபாட்டின் மூலமாக சாதிய மத ரீதியான வெறுப்புச் சிந்தனைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களாக இந்த ஐஐடி ஐஐஎம் நிறுவனங்கள் செயல்படுகிறது மேலும் உயர் சாதி வகுப்பை சாராத மாணவர்களுக்கு பேராசிரியர்கள் மூலம் மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தத்தின் காரணமாக பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஒன்றிய அரசின் உயிர்கள் நிறுவனங்கள் குறிப்பாக ஐஐடி ஐஐஎம் மத்திய பல்கலைக்கழகங்களில் 98 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் எஸ்சி எஸ்டி ஓபிசி வகுப்பை சார்ந்தவர்களாக உள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களை உயர் சாதி கல்வி நிறுவனங்களாக ஒன்றிய மோடி அரசு மாற்றி உள்ளது.மாற்றுக் கல்விக் கொள்கையும் போராட்டமும்1970 முதல் 54 ஆண்டுகளாக இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாய அறிவியல் பூர்வமான கல்வி கேட்டு போராடிவரும் இந்திய மாணவர் சங்கம் இந்திய கல்வியில் உரிய தலையீடுகளை செய்து நவதாராளமயம் மற்றும் கல்வி வணிகமும் மாணவர்களை விழுங்கிவிடாமல் பாதுகாத்து வருகிறது கல்விக்கான போராட்ட வரலாற்றிலிருந்தும் மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கை 2020 க்கு மாற்றான கல்விக் கொள்கை வரைவை முன்வைத்து புதிய கல்விக் கொள்கை 2020-யை எதிர்க்கிறது. மாற்றுக் கல்விக் கொள்கையின் மீது விவாதித்திட ஒன்றிய அரசுக்கு அறைகூவல் விடுக்கிறது. ஆனால் ஒன்றிய மோடி அரசுக்கு கல்வியை மேம்படுத்துவதோ, தற்காலமயப்படுத்துவதோ, நோக்கமில்லை. கல்வி வியாபார பொருளாகுவது காவிமயமாக்குவது மத்தியத்துவபடுத்துவது மட்டுமே நோக்கம். எனவே மாற்று ஆலோசனைகளை செவிமடுக்க மறுப்பதோடு மாற்றுக்கருத்து இல்லாதவாறு மாணவ செயல்பாட்டாளர்களை ஒடுக்குகிறது.இந்திய மாணவர் சங்கம் தனது திட்டத்தில் இந்தியாவில் சாதி மத இன மொழி பாலின பாகுபாடுகளுக்கு எதிராகவும் பாலியல் சிறுபான்மையினர் (LGBTQIA+) மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காகவும் போராடுவோம் என உறுதி கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆரம்பக்கல்விகள் ஆராய்ச்சி கல்விகளை சமமாக கட்டணம் இல்லாத கல்வி கிடைப்பதற்கான, ஒடுக்குமுறை அற்ற சமூகம் அமைவதற்கான போராட்டத்தை நடத்துவோம் என்றும் உறுதியேற்றுள்ளது. இவை அனைத்திற்கும் எதிராக மாணவர் மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்தும் தேசத்தை பாதுகாப்போம் கல்வியை பாதுகாப்போம் என பாராளுமன்ற வீதிகளில் 16 தேசிய மாணவர் இயக்கங்களுடன் இணைந்து போராடுகிறது மோடி அரசை வீழ்த்தினால் தான் தேசத்தையும் கல்வியும் பாதுகாக்க முடியும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் எஸ் எப் ஐ இந்த போராட்டத்தின் மூலம் பிரகடனம் செய்கிறது.தொடரும்…கட்டுரையாளர்: தெள. சம்சீர் அகமது (மாநில தலைவர், இந்திய மாணவர் சங்கம்)