Tamil Marx

கட்டுரைகள்

மோடி அரசை வீழ்த்துவோம்! கல்வியை பாதுகாப்போம்! பகுதி -2

மோடி அரசை வீழ்த்துவோம்! கல்வியை பாதுகாப்போம்! பகுதி -2
  • PublishedJanuary 14, 2024

கோச்சிங்  நிறுவனங்களுக்கு செல்லாமல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பொது நுழைவு தேர்வுகளில் பெரிய அளவில் தேர்ச்சி பெற முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இதன்மூலம் மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த பொது நுழைவுத் தேர்வுகள் எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்பதும் பின்தங்கிய சாதாரண மக்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பே இல்லை என்கின்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியை தடுக்கும் மோடி அரசு

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை பல்கலைக்கழகங்களின் ஆய்வு சுதந்திரத்தை பறிக்கும் விதமாகவும் பல்கலைக்கழகங்களின் தனித்தன்மையை சிதைத்தும் அனைத்தையும் மத்தியத்துவப்படுத்தும் விதமாகவும் தேசிய ஆராய்ச்சி மையம் (nrf) என்ற அமைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளையும் இந்த அமைப்புதான் அனுமதிக்கும் nrf அனுமதியின்றி எந்த ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட முடியாது. ஆராய்ச்சிக்கான தலைப்பை முடிவு செய்வது ஒப்புதளிப்பது துவங்கி அதற்கு உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் இந்நிறுவனமே முடிவு செய்யும் தற்போது உள்ள நடைமுறையில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக பதிவு செய்த மாணவர் தனது துறையில் தனது ஆய்வு வழிகாட்டியாக தேர்வு செய்த பேராசிரியரோடு இணைந்து தலைப்பை தேர்வு செய்து சுதந்திரமாக ஆய்வு செய்ய முடியும். ஆனால் இவற்றை nrf முற்றிலுமாக மறுக்கிறது. இது பல்கலைக்கழகங்களின் தனித்தன்மை பாதிக்கிறது மாணவர்களின் சுதந்திரமான ஆய்வு முடிவுகளையும் புறந்தள்ளுகிறது மேலும் என்ஆர்ஃஎப் என்கின்ற அமைப்பு நிறுவுவதற்கு முன்பே ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை காயத்ரி மந்திரம் கூறினால் கொரோனா நோய்க்கு பலனளிக்குமா என்ற ஆய்வை நடத்தியதும் அதற்கு ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அனுமதி மற்றும் நிதி உதவி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. nrf-க்கு முன்பே இந்த நிலை என்றால் nrf எந்த அளவிற்கு அறிவியலுக்கு முரணான பிற்போக்கான ஆய்வுகளை மட்டும் ஊக்கப்படுத்தும் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை. இவ்வாறு அரசுக்கு சாதகமான ஆய்வுகளை மட்டுமே அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மிகப் பெரும் பின்னடைவை சந்திப்பதோடு இந்தியாவில் பொருளாதார கட்டுமானத்தையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

பொது நுழைவு தேர்வு

ஒன்றிய நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து கல்வியில் எல்லா துறைகளுக்கும் தேசிய அளவில் ஒற்றை பொது நுழைவுத் தேர்வு என்கின்ற புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமான இந்த நுழைவுத் தேர்வுகளை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. முதலில் நீட் தேர்வு தற்போது க்யூட் தேர்வு மேலும் பல நுழைவுத் தேர்வுகளுக்கான வரைவுகளை தயார் செய்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால் மிகவும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட பட்டியல் பழங்குடி சமூக மாணவர்களின் மருத்துவ கனவு என்பது பலவந்தமாக அழிக்கப்படுகிறது.  இந்தத் தேர்வு முறைமை மிகவும் மோசமான நடைமுறைகளை கையாளுகிறது. தேர்வுக்கு முன்பே மாணவர்களுக்கு அச்சமூட்டும் வகையில் அவர்களை பரிசோதிப்பதும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை சுதந்திரமாக அணுகுவதற்கு தடையாக நெகட்டிவ் மதிப்பெண்களை முன்னிறுத்துவதும் தேர்வுக்கான கேள்விகளில் தமிழ் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்வது என குழப்பங்களின் கூடாரமான ஒரு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது. நீட் தேர்வாள் தமிழகத்தில் மட்டும் அனிதா முதல் ஜெகதீசன் வரை  இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தேசிய அளவில் 2016யில் 17 பேர் 2017யில் 7 பேர் 2018யில் 7 பேர் கடந்த ஆண்டில் 15 மாணவர்களும் இந்த ஆண்டில் இதுவரை 15 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். மாணவர்களை பொதுநுழைவு தேர்வுகள் தற்கொலைக்கு தூண்டுவதோடு மட்டுமின்றி முறைசாரா கோட்சிங் நிறுவனங்களையும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய செய்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 71-வது கணக்கெடுப்பின்படி இந்திய மாணவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் தனியார் கோச்சிங் சென்டர்களில் கோச்சிங் பெறுவதாகவும் குடும்ப செலவில் 12 விழுக்காடு கோச்சிங் நிறுவனங்களுக்கு செலவழிக்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு கோச்சிங் சென்றவர்களுக்கு சராசரியாக செலுத்த வேண்டிய கட்டணம் என்பது 2 லட்சத்து 49 ஆயிரம் முதல் மூன்று லட்சத்து 50 ஆயிரம் வரை உள்ளதாக NDTV நடத்திய ஆய்வில் கூறுகிறது. தி பிரிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தற்போது கோச்சிங் நிறுவனங்களின் வருமானம் இந்தியாவில் 58 ஆயிரத்து 88 கோடியாகவும் இது 2028-இல் 1,33,995 கோடியாகவும் உயரும் என்று குறிப்பிடுகிறது. இத்தனை பெரும் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் யாவும் வெறும் நேரடி மற்றும் இணையவழி கோச்சிங் நிறுவனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் பொது நுழைவு தேர்வு கொள்கையால் இந்த நிறுவனங்கள் இவ்வளவு பெரும் கொள்ளை அடிக்கிறது.money 9 என்ற நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்து 66 ஆயிரம். உண்மையில் மக்களின் வருமானம் இதைவிட குறைவாக இருக்கும் என்று கூறுகிறது. ஆண்டுக்கு மூன்று லட்சம் வருமானம் ஈட்டும் குடும்பம் கூட இந்த இந்தக் கோச்சிங்குகளை பெற முடியாது என்பதே உண்மை. கோச்சிங்  நிறுவனங்களுக்கு செல்லாமல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பொது நுழைவு தேர்வுகளில் பெரிய அளவில் தேர்ச்சி பெற முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இதன்மூலம் மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த பொது நுழைவுத் தேர்வுகள் எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்பதும் பின்தங்கிய சாதாரண மக்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பே இல்லை என்கின்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்தின் மீதான தாக்குதல்

மோடி அரசு மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூட நயவஞ்சகமாக சனாதன சங்க பரிவார சிந்தனைகளை திணித்தும் இந்திய வரலாற்றை திரித்தும் வருகிறது தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமம் (NCERT) 2023ல் பாடத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை செய்தது குறிப்பாக முகலாயர்கள் குறித்தான சில பாடங்கள், டெல்லி சுல்தானியர்கள், மகாத்மா காந்தியின் படுகொலையில் உள்ள இந்துத்துவாவின் செயல்பாடு உள்ளிட்டவற்றை நீக்கியது. 2022 ஜூன் மாதம் பனிரெண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் மன்னர்களின் நாடகம், முகல்லாயர்கள் நீதிமன்றம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை இந்திய வரலாறு பகுதிகளில் நீக்கியது. உலக அரசியல் பகுதியில் பனிப்போர் பகுதிகள் அமெரிக்க மேலாதிக்கம் உள்ளிட்டவற்றையும் இந்திய அரசியல் பகுதியில் குஜராத் கலவரம் குறித்தான பகுதிகளையும் நீக்கியது 11ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் மத்திய இஸ்லாமிய நிலப்பகுதியில் கலாச்சாரங்களின் மோதல் தொழில் புரட்சி உள்ளிட்ட பகுதிகளை நீக்கியது எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் விடுதலைக்கு பிறகு இந்தியா நீக்கப்பட்டது பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் பிரபலமான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் பகுதியும் ஜனநாயகத்தின் சவால்கள் பகுதியும் நீக்கப்பட்டது. 2023 காந்தி படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குமான தொடர்பு பகுதி நீக்கப்பட்டது. ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஹுமாயூன் ஷாஜகான் அக்பர் ஜஹாங்கீர் குறித்தான பகுதிகளில் நீக்கப்பட்டது மேலும் டார்வின் பரிணாம கோட்பாடுகள் பகுதி நீட்கப்பட்டது இதே நேரத்தில் கர்நாடகாவில் சவர்க்கர் புல்புல் பறவையில் பறந்தார் எனவும், எட்டாம் வகுப்பு கேள்வித் தாளில் வர்ணாசிரமத்தின் படி தாழ்த்தப்பட்டவர்கள் யார் என்ற கேள்வியும், ஒலி மாசுபாட்டிற்கு இஸ்லாமியர்கள் மசூதியில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி தான் காரணம் என சங்க பரிவார் சிந்தனையை புகுத்துகின்றனர். இவர்கள் கட்டமைக்கவிற்கும் இந்தியாவில் சிறுபான்மையினர்களை குறிப்பாக இஸ்லாமியர்களை எதிரிகளாக கட்டமைப்பதற்காக பாடப்புத்தகத்தில் இந்தியாவின் எதார்த்தமான வரலாற்று பகுதிகளை நீக்கி இருக்கிறது குறிப்பாக முகலாயர்கள் நீதிமன்றம் பகுதி நீக்கப்பட்டதற்கான காரணம் இந்தியாவில் இஸ்லாமிய மதம் வளர்ச்சி அடைவதற்கு அடிப்படையான காரணம் இஸ்லாமிய மதத்திற்கு மதமாறவில்லை என்றால் அன்றைய முகலாயர்கள் மக்களை கொலை செய்தார்கள் என்கின்ற ஆர்எஸ்எஸ் சங்க பரிவார பிரச்சாரம் உன்மை என நம்ப வைப்பதற்காக அதேபோல அக்பர் குறித்தான பாட பகுதியினை நீக்கி இருப்பது இந்தியாவின் மதச்சார்பின்மை அக்பரிடம் எப்படி இருந்தது என்பதை மறைக்க கொண்டுவரப்பட்டிருக்கும் ஒரு சதி ஆகும் ஏனென்றால் இந்திய இஸ்லாமிய மன்னர்களில் மிகவும் முற்போக்காக செயல் பட்டவதில் அக்பரின் பங்கு மிக முக்கியமானதாகும் குறிப்பாக தீன் இலாஹி மதம் அற்றவர்களின் மதம் என்கின்ற ஒரு புதிய கோட்பாட்டை முன்னிறுத்தி ஜெஸ்ஸியா போன்ற வரிகளை விலக்கி ஒரு மதச்சார்பற்ற அரசனாக சக்கரவர்த்தி அக்பர் இருந்ததை மறைத்து ஒரு மதவெறியனாக காட்சிப்படுத்தவே இவர்கள் இந்தப் பகுதிகளை எல்லாம் நீக்கி இருக்கின்றனர். இப்படி இந்தியாவின் வரலாற்றையும் கல்வியையும் சிதைக்கும் விதத்தில் பாடப்பிரிவுகளில் பல்வேறு மாறுதல்களை செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

தொடரும்…

கட்டுரையாளர்: தெள. சம்சீர் அகமது (மாநில தலைவர், இந்திய மாணவர் சங்கம்)

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *