Tamil Marx

இந்தியா வகுப்புவாதம்

இந்துத்துவா கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்

இந்துத்துவா கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்
  • PublishedDecember 6, 2023

1992 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவை என்ற பெயரில் இந்துத்துவா கும்பலால் பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமா பாரதி உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர். இவர்கள் செய்த குற்றத்தை சிபிஐ நிரூபிக்காததால் விடுவிக்கப்பட்டனர்.

மதவெறியை தூண்டி ஆட்சி அதிகாரத்திற்கான வாக்கு வங்கி கூட்டத்தை உருவாக்க பாபர் மசூதியை ராமர் பிறந்த இடம் என்று ஆதாரமற்ற கட்டுக்கதையை உருவாக்கி இந்த செயலை இந்துத்துவா கும்பல் அரங்கேற்றியது.

தற்போது வரை எந்த ஆதாரமும் இன்றி இந்த கட்டுக்கதை மூலம் மதவெறியை பரப்பி வருகின்றனர்..

தற்போது அயோத்தி இடம் தொடர்பான வழக்கு நரேந்திர மோடி ஆட்சியில் திட்டமிட்டு முடிக்கப்பட்டது .மேலும் வேலைவாய்ப்பின்மை,வறுமை தீவிரமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இன்று பல ஆயிரம் கோடிகள் செலவில் அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

மதவெறிக்கு இந்திய மக்கள் பெரிய விலை கொடுத்து வருகிறார்கள்.இந்தியாவை மதவெறிக் கும்பலிடம் இருந்து மீட்க பொருளாதார நெருக்கடிகளை மையப்படுத்திய தீவிர பிரச்சாரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *