2020-21ல் கல்வி ஆண்டில் 1.79 லட்சம் முஸ்லீம் மாணவர்கள் உயர்கல்வியில் இணைவது குறைந்துள்ளது.
2019-20ஆம் ஆண்டில் 21 லட்சம் முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வியில் இணைந்திருந்த நிலையில், 2020-21ஆம் ஆண்டில் அந்த அந்த எண்ணிக்கை 19.21 லட்சமாகக் குறைந்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டு உயர்கல்வியில் 18-23 வயதுக்குட்பட்ட முஸ்லிம் மாணவர்கள் இணைந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 8.5% க்கும் அதிகமாக குறைந்துள்ளது என்று ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) மற்றும் உயர் கல்விக்கான இந்திய ஆய்வு (AISHE).அனைவரின் தரவுகளின் பகுப்பாய்வு மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.
இந்த தரவுகள் மூலம் 2019-20ஆம் ஆண்டில் 21 லட்சம் முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்த நிலையில் 2020-21ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 19.21 லட்சமாகக் குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
தேசிய கல்வித் திட்டமிடல் நிர்வாகத்தின் முன்னாள் பேராசிரியர் அருண் சி.மேத்தா, “இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2016-17ஆம் ஆண்டு 17,39,218 முஸ்லீம் மாணவர்களும் , 2019-20 இல் 21,00,860 மாணவர்களும் இணைந்திருந்த நிலையில் 2020-21ஆம் ஆண்டில் 19,21,713 முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் இணைந்துள்ளனர்.அதாவது 2019-2020 கல்வி ஆண்டை விட 1,79,147 மாணவர்கள் குறைந்துள்ளதுனர்.

பதிவுசெய்யப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் சதவீதமும் 2016-17ல் 4.87 ஆக இருந்து 2020-21ல் 4.64 ஆகக் குறைந்துள்ளது.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முஸ்லீம் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் முந்தைய வகுப்புகளை விட குறைவாக உள்ளது என்பது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தொடர் நிகழ்வுகள் என அந்த அறிக்கை கூறுகிறது. முஸ்லீம் மாணவர்களின் பிரதிநிதித்துவம் 6 ஆம் வகுப்பிலிருந்து படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் மிகக் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
6-8 ஆம் வகுப்பு வரை முஸ்லீம் மாணவர்கள் 6.67 கோடி என்ற எண்ணிக்கையிலும் மொத்த மாணவர் சேர்க்கையில் சுமார் 14.42% ஆக இருந்தாலும், 9-10 ஆம் வகுப்பில் 12.62% ஆகவும், 11-12 வகுப்பு வரை 10.76% ஆகவும் படிப்படியாக குறைகிறத என அறிக்கை காட்டுகிறது.
பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறைந்த அளவிலான முஸ்லீம் மாணவர்களே கல்வி பெறும் நிலை உள்ளது, இது இந்த மாநிலங்களில் உள்ள பல முஸ்லீம் குழந்தைகள் இன்னும் கல்வி நிலையத்திற்கு வெளியே இருப்பதைக் குறிக்கிறது.மேலும் வயதுக்கு ஏற்ப வகுப்புகளில் பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து சேர்ப்பதை முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
18.64% முஸ்லீம் மாணவர்கள் இடைநிலைப் படிப்பை பாதியிலேயே நிறுத்துகிறார்கள், பொதுவாக உள்ள அனைத்து மாணவர்களின் கல்வி இடைநிறுத்த விகிதமான 12.6% ஐ விட அதிகமாகும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அஸ்ஸாமில் – 29.52% மேற்கு வங்கத்தில் -23.22% என முஸ்லீம் மாணவர்களிடையே அதிக அளவிலான கல்வி இடைநிறுத்தம் பதிவாகி உள்ளது.இதே நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 5.1% எனவும் கேரளாவில் 11.91% பதிவாகியுள்ளன.
திட்டமிட்ட இலக்குடன் கல்வி ஆதரவை உள்ளடக்கிய கொள்கைகளை செயல்படுத்துவது இந்த இடை நிற்றல் இடைவெளியைக் குறைக்கவும் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்கவும் உதவும்” என்றும் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
கல்வியை இடை நிறுத்தம் செய்யும் பல முஸ்லீம் மாணவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உயர் கல்விக்கான செலவை சமாளிக்க போராடுகிறார்கள். “இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, நிதி நெருக்கடிகளை சந்தித்து வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் ஆதரவை வழங்குவது அவசியம்.
(ஏற்கனவே பாஜக அரசு முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது)
முஸ்லீம் மாணவர்களுக்கு நிதி உதவி தொகைகள், கல்வியை ஊக்குவிக்கும் பரிசுகள், கல்வி கடன்கள் அதற்கான மானியங்களை அதிக அளவும் எளிமையாகவும் கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வியைப் பெற உதவும்” என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது.