Tamil Marx

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் சர்வதேசம்

பாலஸ்தீன கைக்குழந்தைகளை மருத்துவமனையில் கொடூரமான சாக விட்ட இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள்

பாலஸ்தீன கைக்குழந்தைகளை மருத்துவமனையில் கொடூரமான சாக விட்ட இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள்
  • PublishedNovember 29, 2023

இஸ்ரேல் இராணுவம் காசாவிலுள்ள அல்-நாஸர் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள ஐந்து பாலஸ்தீன குழந்தைகளை பராமரிக்க கூடாது என மருத்துவ ஊழியர்களை கட்டாயப்படுத்தி அந்த குழந்தைகளை கொடூமாக சாக விட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம்.


தற்போது அந்த மருத்துவமையில் மூன்று வாரங்கள் தனியாக இருந்த ஐந்து கைக்குழந்தைகள் “இறந்து சிதைந்த நிலையில்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது ஒரு கொடூரமான மரணதண்டனையை விட மிக மோசமான மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம் என Middle East Monitor என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.middleeastmonitor.com/20231129-israel-left-premature-palestinian-babies-to-die-alone-after-evacuating-gaza-hospital/


மருத்துவமனை இயக்குநர் டாக்டர் முஸ்தபா அல்-கஹ்லோட், குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு முறையீடு செய்ததாகவும், ஆனால் குழந்தைகளுக்கு எந்த உதவியும் வரவில்லை என்றும் அவர் கூறியதாக யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.


இஸ்ரேல் ராணுவம் ,மருத்துவமனையில் இருந்த அனைவரையும் வெளியேற்றிய போது இஸ்ரேல் ராணுவ அதிகாரியிடம் அந்த மருத்துவர் , சுவாசக் கருவிகளில் உள்ள ஐந்து குழந்தைகளின் நிலையையும் மற்றும் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்று எச்சரித்ததாக தெரிவித்தார்.

மருத்துவ மனையில் அழுகிய நிலையில் உள்ள குழந்தைகளின் உடல்கள்


குழந்தைகளின் உயிரைக் காக்க போதுமான சிறப்பு உபகரணங்கள் இல்லாததாலும் இஸ்ரேல் குழந்தைகளின் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்காததால் தாங்கள் அந்த குழந்தைகளை பாதுகாத்து கொள்கிறோம் என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கூறியதால் மருத்துவர்கள் அந்த குழந்தைகளை அங்கே விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.


இறுதியாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளால் அந்த கைக்குழந்தைகள் கைவிடப்பட்டு கொடுரமாக சாகவிடப்பட்டுள்ளன.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *