Tamil Marx

ஆசிரியர்குழு

இந்திய தொழிலாளர்களின் நிலை

  • PublishedNovember 15, 2023

இந்தியாவில் 15 வயதுக்கு மேல் உழைக்கும் திறன் உள்ள இளம் வயதினருக்கு (ஆண் பெண் உட்பட ) 100 இல் 6.6 பேருக்கு வேலை இல்லை என்று ஓர் ஆய்வு 2023 (ஏப்ரல் – ஜூன் மாதப்படி ) தெரிவிக்கிறது.

சமீபத்தில் வெளியான PLFS ( Periodic labour force survey ) வருடாந்திர ஆய்வறிக்கையின் படி மாதச் சம்பளம் பெறும், பெரும்பகுதியான தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு என்கிற தகுதி இல்லாமல் உள்ளது என கூறுகிறது.

இந்தியாவில் சரிபாதி தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தின் போது உடல்நிலை சரியில்லாமல் போவது, சில நாட்கள் விடுமுறை எடுத்து சுற்றுலா செல்வது அல்லது தங்களுக்கு பிறந்த குழந்தையை பராமரிப்பது போன்றவை ஊதியத்துடன் விடுப்பு என்பது ஆடம்பரமான நிலை போல உள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையின் தகவல் படி மாதாந்திர சம்பளம் பெறும் 46.8% தொழிலாளர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் வேலையின் தன்மையை பொறுத்து ஊதியத்துடன் கூடிய விடுப்பு என்பது, உடல்நலம் சரியில்லாமல் போவது, மகப்பேறு போன்றவை தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது எனவும் கூறுகிறது.

இது சாதாரணமாக நிறுவனங்கள் வழங்கும் விடுமுறையை தவிர்த்து எடுக்கப்பட்ட ஆய்வாகும்.
ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இந்த வகை தொழிலாளர் எண்ணிக்கை 2019-20 மற்றும் 2022-23 க்கு இடையில் 5.5% குறைந்துள்ளது. இந்தியாவில் 2019-20 காலகட்டத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு இல்லாதவர்கள் 52 % ஆக இருந்தது.இது 2020-21 இல் 47.9% க குறைந்தது.

2021-22இல் 49% ஆக உயர்ந்தது.2022-23இல் குறைந்து உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேஸ், சிக்கிம், குஜராத் ,உ.பி ,பஞ்சாப்,சத்தீஸ்கர், உத்தரகாண்ட், ஆந்திரா ஆகிய 9 மாநிலங்களில் பெரும்பகுதியான தொழிலாளர்களுக்கு ஊதியத்த்துடன் விடுப்பு என்பது இல்லை.

ராஜஸ்தான் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசம். அங்கு ஊதியத்துடன் விடுமுறை கிடைக்காதவர்கள் 63% என்ற அளவில் உள்ளனர் .

மேலும் ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் வேலை செய்யும் மூன்று பங்கு ஆண் தொழிலாளர்களுக்கு ஊதிய விடுப்புடன் விடுமுறை எடுப்பதற்கான தகுதி இல்லை.

மாதச் சம்பளம் பெற்றாலும் அவசரகாலத்தில் ஊதியத்தை இழந்து தான் விடுமுறையை எடுக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

மத்திய பிரதேசத்தில் ஊதியம் இல்லாமல் விடுமுறை எடுக்கும் நிலையில் 60 சதவீத தொழிலாளர்கள் உள்ளனர். .

சிக்கிம் மற்றும் குஜராத்தில் 57 சதவீதமும், மிசோரம், ஒடிசா ,அருணாச்சல் பிரதேஷ் மற்றும் கோவாவில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவும் உள்ளனர்.

ஆண்களை விட மாத சம்பளம் வாங்கும் பணியில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு கிடைக்கிறது. பெண்களோடு ஒப்பிடுகையில் (43.5%) மாத சம்பளம் பெறும் ஆண்களுக்கு
53 .1% ஊதிய விடுப்புடன் விடுமுறை எடுக்க தகுதியில்லை.

ஏனென்றால் பெண் தொழிலாளர்களின் பேறுகால விடுப்பும் இதில் அடங்கும்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *