ஆப்பிரிக்க நாடுகளில் நடப்பது ராணுவ சதியா?
இளைஞர்கள் கொண்டாடுவது ஏன்? தோழர் – சேது சிவன்
கடந்த மூன்று ஆண்டுகளில், புர்கினா பாசோ, சாட், மாலி கினியாவில்,நைஜர், மற்றும் கெபான் உள்ளிட்ட 7 ஆப்பிரிக்க நாடுகளில் ராணுவங்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளன.சமீபத்தில் கெபானில் நடைபெற்ற தேர்தலில் 3-வது முறையாக அலி பாங்கோ வென்ற சில மணி நேரத்தில் ராணுவ கிளர்ச்சி நடந்தது.இதனை தொடர்ந்து ஆப்பிரிக்கா ராணுவ சதியின் மையமாக மாறியுள்ளதாக மேல்தட்டு வர்க்கமும் ஊடகங்களும் கருதுகின்றன.இவர்கள் ராணுவ கிளர்ச்சியை வெறும் கலகமாக மட்டுமே பார்க்கின்றனரே தவிர நாட்டின் வரலாற்று பின்புலத்தில் இருந்து பார்க்க தவறுகின்றன.
மேலும் இவர்கள் தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வரும் தலைவர்களே ஆட்சிக்கு தகுதியானவர்கள் என நம்புகிறார்கள். பிரான்ஸ் ஏகாதிபத்திய தலையீடினால் அரசியல் சுதந்திரத்தை பெற்றிருந்தாலும் ஆப்பிரிக்க நாடுகள் பிரான்ஸ் நாட்டின் காலனித்துவ அடிமைகளாகவே உள்ளனர்.
நேரடி ஆட்சியை ராணுவம் மேற்கொள்வது ஏற்புடைத்தல்ல என அறிந்திருந்தாலும் ஆப்பிரிக்க மக்கள் ராணுவ நடவடிக்கைகளை வரவேற்கின்றனர்.அதே போல ஒரு நாட்டின் ராணுவம் ஆட்சியை கவிழ்க்கும் போது வல்லாதிக்க நாடுகளின் திட்டம் இருக்கும்.ஆனால் ஆப்பிரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் ஆதரவுடன் நடந்த ராணுவ கிளர்ச்சியை கண்டு பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கதி கலங்கி போய் உள்ளன
