Tamil Marx

இந்தியா தொழிலாளர் போராட்டங்கள்

தொழிலாளர்களின் உடன்பாடுகள் ஊதிய உயர்வுக்கானது மட்டுமல்ல!

தொழிலாளர்களின் உடன்பாடுகள் ஊதிய உயர்வுக்கானது மட்டுமல்ல!
  • PublishedDecember 2, 2021

பன்னாட்டு நிறுவனங்களில் அப்பல்லோ டயர் -தாய் ஸ்மித் -எல்என்டி இசிசி -வேலியோ லைட்டிங் -குரூப் காஸ்மோஸ் – பிஎம்டபுள்யு – கிளாசிக் இண்டஸ்ட்ரி -ரோக்பாரிவர் போன்ற நிறுவனங்களுக்கும் சிஐடியு தொழிற்சங் கத்திற்கும் இடையிலான ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் மீது இக்காலத்தில்ஏற்பட்ட உடன் பாடுகள் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளன. பன்னாட்டு நிறுவனங்களில் சிஐடியு சங்கத்தோடு பேசவோ நேருக்கு நேர் அமர்ந்து விவாதிக்கவோ 13 ஆண்டுகளுக்கு முன்புஎந்த நிறுவனங்களும் தயாராக இல்லை. இதற்கான போராட்டங்களை மிகுந்த நிதா னத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை உயர்த்திப் பிடித்து, அதே நேரத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக சிஐடியு இன்று உருவாகி இருப்ப தற்கு பின்னணியில் ஏராளமான தியாக வடுக்களை தாங்கியிருக்கிறோம்.
வேலைநிறுத்தம் என்கிற மாபெரும் மகத்தான போராட்டத்தை சந்திக்காத ஆலைகளே இல்லை. இன்று ஒப்பந்தம் போடுகிற எல்லா ஆலைகளிலும் சங்கம் அமைத்தபோது சங்கத்தை ஏற்க மறுத்த நிறுவனங்கள்தான். அவை சங்கம் அமைத்தவர்க ளை, வாய்ப்புக் கிடைத்தபோது பழிவாங்கும் நடவடிக்கை களுக்கு உள்ளான தோழர்கள் கடந்து வந்த பாதைகள் என்றும் மறக்க முடியாதவை. இதுபோன்று 70க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இந்த போராட்டத்தை தொடர்ந்து எதிர்கொண்டிருக்கிறோம். சிஐடியு என்றாலே ஒருமாதிரியாக பார்த்த காலம் இன்று மலையேறிவிட்டது. நிராகரிக்கப்பட்ட நிறு வனங்களோடு ஒப்பந்தம் போடுவதற்கு தொழிற்சாலை களில் தனது வர்க்க உரிமைகளை தக்க வைத்துக் கொண்டு அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத் திற்கான பொருளாதாரப் பாதுகாப்பையும் சமூக நலத் திட்டங்களையும் உறுதி செய்கிற உடன்பாடுகளை நம்மால் இந்த காலத்தில் போடப்படுகிறது என்று சொன்னால் சீர்திருத்த தொழிற்சங்கங்களின் அணுகு முறைக்கு மாற்றாக புரட்சிகரமான ஒரு தொழிற் சங்கத்துக்குரிய ஒரு மாறுபட்ட அணுகு முறையை சிஐடியு மேற்கொள்வது இந்த வெற்றிப் பயணத்திற்கு முக்கியக் காரணமாகும்.
ஒரு ஆலைக்குள் தொழிற்சங்கத்தை அமைத்த பிறகு அந்த சங்கம் ஜனநாயக முறையில் வழி நடத்து வது, தொழிற்சாலை நிலையாணை சட்ட விதிமுறை களை தொழிலாளிகளுக்கு பயிற்றுவிப்பது, உலகளா விய சகல வல்லமையும் கொண்ட கார்ப்பரேட் கம்பெனி களின் நிர்வாகங்களுக்கு மத்தியில் தொழிலாளர் ஒற்றுமை என்கிற ஒற்றை பலத்தின் அடிப்படையில் மட்டுமே. எந்தவிதமான சட்டரீதியான சட்டபாதுகாப் பும் இல்லாத ஒரு சூழ்நிலையில் நாம் நமக்கான போராட் டத்தை நடத்துகிறோம் என்கிற புரிதலை அந்த தொழி லாளிகளுக்கு சிஐடியு உருவாக்குகிறது. இதுவரையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் சிஐடியு கடந்த காலத்தில் நடத்திய அனைத்து வேலைநிறுத்தப் போராட்டங்களும் தோல்வியை சந்திக்காமல் மேலும் ஒர் அடி முன்னே என்ற உரிமைகளை வென்றெடுத்த முடிவுகளோடு அந்த போராட்டங்கள் முடிக்கப்பட்டன.
இன்று பல்வேறு ஆலைகளில் தவிர்க்க முடியாத சக்தியாக தொழிற்சங்க அங்கீகாரத்தை சிஐடியு பெற்றி ருக்கிறது என்று சொன்னால் மார்க்சிய கண்ணோட் டத்தோடு தன் அணுகுமுறையை வகுத்துக்கொண்டு மிக கவனமாக வழிநடத்திவருவது இந்த வெற்றி களுக்கு அடிப்படைக் காரணமாகும். இளம் வயதுள்ள தொழிலாளர்களை தன்படை வரிசையுடன் மூர்க்கத்தனமான முதலாளித்துவ நிர்வா கத்தோடு எதிரெதிர் நிலையில் இருந்து எதிர்கொள்வது என்பது அது ஒரு புதுவிதமான கலை, கத்திமேல் நடப்பது போல். இதை நேர்த்தியாக கையாளுவதற்கு வர்க்கஅரசியல் கல்வியும் களப் போராட்ட அனுபவ மும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு உடனுக்குடன் முடிவெ டுக்கும் திறனும் முழுக்க முழுக்க சொந்த சுக துக்கங்களை இரண்டாம் நிலையில்வைத்து எந்த நேரமும் பிரச்சனைகளை காலம் தவறாமல் எதிர்கொள் ளும் உழைப்பும் இந்த பயணத்தில் மிக முக்கியமான படிக்கட்டுகள். ஒரு வலுவான சங்கத்தை நடத்துவது என்பது ஆலையில் வரும் எல்லா பிரச்சனைகளையும் சங்க நிர்வாகக் கமிட்டிகளில் வெளிப்படைத் தன்மையோடு விவாதிப்பது பிரச்சனையில் இருக்கும் தன் பக்க மான சரிமற்றும் தவறுகளையும் நிர்வாகத்தின் நோக்கத் தையும் சரியாக மதிப்பீடு செய்து அதன் மீது ஒரு சங்கத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்வது.
தனது ஆலை சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே தனக்கான சங்க நடவடிக்கையாக செயல்பட்ட நிலைமையிலிருந்து இன்று சற்று முன்னேற்றகரமாக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உணவு புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம், போராடுகிற சங்கங்களுக்கு நிதிஉதவி, ஆதரவு இயக்கங்கள். ஒவ்வொரு ஆலைக்குள்ளேயும் நடக்கக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்கிற முறையில் ஆலைத் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு மத்தியில் ஒரு பரந்து பட்ட ஒற்றுமையை நோக்கி சிஐடியு பயணிக்கிறது. இந்த காலகட்டத்தின் வெற்றிகளுக்கு இவையும் முக்கியகாரணமாகும்.
நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கம் இடையே ஏற்படக் கூடிய உடன்பாடுகள் என்பது வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியான அறிவிப்புச் செய்தியாக இருக்கும். ஆனால் அந்த கட்டத்தை அடைவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேல் 25க்கும் மேற் பட்ட பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மேற்கொள் ளப்படுகின்றன. வெறும் பணத்திற்கான போராட்டம் அல்ல இவை. முதலாளித்துவ நிர்வாகம்தனக்கான லாபத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு அவர்கள் நடத்துகிற போராட்டம். உழைப்புச் சுரண்டலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பொருளாதார ரீதியாக தன்னை உயர்த்திக் கொள்ளவும் சமூக பாதுகாப்பை கொடுக்க வேண்டிய கட்டாயத்தை எதிர் நிர்வாகத்திற்கு ஏற்படுத்தவும் இரண்டு எதிரும் புதிருமான சக்திகள் ஒரு மையப் புள்ளிக்கு கொண்டு வருவது என்பது தொழிற்சங்கத் தலைமையின் ஆகப்பெரிய பணியாக இருக்கிறது.
வேலை பாதுகாப்பு, உடல்ரீதியான ஆலை விபத்து களை எதிர்கொள்வதில் இருந்து தற்காப்பு, குடும்பம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம், பணியிடத்தில் தொழில்தன்மையின் மூலம் வரக்கூடிய உடல் சார்ந்த நோய்கள் இதற்கான நிவாரணங்கள், ஆலை விபத்து, சாலை விபத்து, இதன் மூலம் ஏற்படும் உயிரி ழப்புக்கான காப்பீடுகள், நீண்டகால நோய்களை எதிர்கொள்பவர்க்கு சம்பள இழப்பு இல்லாத விடுமுறை கொள்கைகள், இப்படி பல்வேறு விதமான வர்க்க நலன் சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான வாதங்கள், விவாதங்கள், ஆதாரங்கள், உதார ணங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், சட்ட ரீதியான விளக் கங்கள், அரசின் கொள்கைகளால் இந்த சமூகத்தில் தொழிலாளி வர்க்கம் இழந்துவரும் வாங்கும் சக்தி, இதற்கான ஆதாரங்கள், நாம் முன்வைக்கிற கோரிக்கை க்கான தர்க்கரீதியான நியாயங்கள். இவை முழுவதும் பேச்சுவார்த்தையின் அடிப்படைகளாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் முன்வைக்கிற தொழிற்சங்க தலைவர்களின் தலைமையும் சங்க நிர்வாகிகளும் எந்த சட்டக் கல்லூரியிலும் பயிலாதவர்கள் என்பது மிகமிக முக்கியமானது. வர்க்க அரசியல் -தத்துவபலம், களப் போராட்டக் கல்வி, வர்க்க அர்ப்பணிப்பு, முதலாளித்துவ அரசியல் மற்றும் சமூக அமைப்பை பற்றிய புரிதல், சிஐடியு சங்க கோட்பாடுகளை உள்வாங்கிய வர்க்கப் பார்வை. எல்லாவற்றுக்கும் மேலாக சங்கத் தலைமை வழிகாட்டுதலை முழுமனதுடன் ஏற்று நடைபோடும் தொழிலாளி வர்க்கத்தின் உருக்கு போன்ற ஒற்றுமைப் படை. இதுவே நமது பலம்.
நமக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு இருப்பவர்கள் வர்த்தக அதிகாரிகள், நிதி நிர்வாக அதிகாரி, சட்ட நுணுக்கங்களை அறிந்த அறிஞர்கள், தொழில் சார்ந்த எல்லா ஆதாரங்களையும் விரல்நுனியில் தகவல் சேமிப்பின் மூலமாக உருவாக்கி வைத்தி ருக்கும் வல்லமைமிக்க அதிகாரவர்க்கம், தொழிற் சாலைக்குள் தொழிலாளிகள் இயற்கையாக நடக்கக் கூடிய சில தவறுகளை ஆதாரங்களை வைத்துக் கொண்டு நமது வாதங்களை மறுக்கும் ஆலை மட்ட அதி காரிகள், தனது லாபத்தின் சிறு துளியை கூட விட்டுத் தராமல் தக்கவைப்பதற்கான நிர்வாகத்தின் அணுகு முறைகள், லாபத்தில் இயங்கும் ஆலைகள், நஷ்டத்தில் இயங்கும் ஆலைகள், நலிந்த நிலை நோக்கிய ஆலை கள், என்று பலவகைகளில் அதன் தன்மைக்கு ஏற்றவாறு பேச்சுவார்த்தைகளின் போக்கும் முடிவுகளும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
செமிக் கண்டக்டர், சிப்பு போன்ற தொழில்நுட்பக் கருவிகள் தட்டுப்பாடு, கார்ப்பரேட் நிறுவனங்களில் நடக்கக்கூடிய வர்த்தகப் போட்டி. இதனால் ஏற்படும் ஆலை மூடல்கள் என்று பல நெருக்கடிகளும் தொழி லாளி வர்க்கத்தின் உரிமைகள் தேவைகள் குறித்து பேசுகிறபோது நம் முன்னாடி இருக்கிற தடைகளாக இந்த காலத்தில் முன்னுக்கு வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால் இந்த காலகட்டங்களில் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின் மீதான உடன்பாடுகள் என்பதும், இரண்டு எதிரும் புதிருமான வர்க்கங்கள் ஒரு மையப் புள்ளிக்கு வருவது என்பதும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமா கவே இருக்கின்றன.
முடிவுக்கு வருகிற உடன்பாடுகள் தொழிலாளர்க ளுடைய பேரவைக் கூட்டங்களில் ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்பட்டு அவர்கள் முழு ஒப்புதல் பெறுவ தின் மூலமே உடன்பாட்டை ஏற்கிற சிஐடியு கடைப் பிடிக்கும் ஜனநாயக முறைகள், வலுவான தொழிற் சங்க செயல்பாட்டின் முக்கியப் பாத்திரமாகும். சம்பள உயர்வு, இதுபோன்ற உடன்பாடுகள் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்ச னைக்கும் தீர்வு அல்ல என்பதையும் இன்றைய அனைத்து வாழ்க்கை நெருக்கடிகளுக்கும் முதலா ளித்துவ அரசியல் அமைப்பு முறையே காரணமாகும் என்பதும் இந்த அமைப்பை முற்றிலுமாக மாற்றிய மைக்கும் அந்தவிடியலை நோக்கிய நெடும் போராட் டத்தின் ஒரு பகுதியே இந்தப் பயணம் என்பதையும் தொழிலாளர்களின் பேரவைக் கூட்டங்களில் புரிய வைத்துக் கொண்டேதான் சிஐடியு தனது தொழிற்சங்க பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர் : சிஐடியு மாநிலச் செயலாளர்.
source: theekkathir

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *