Tamil Marx

இந்தியா தொழிலாளர் போராட்டங்கள்

வீரியமடைந்திடும் விவசாயிகள் போராட்டமும் விரக்தியால் விளைந்த கொடூரக் கொலைகளும்…

வீரியமடைந்திடும் விவசாயிகள் போராட்டமும் விரக்தியால் விளைந்த கொடூரக் கொலைகளும்…
  • PublishedNovember 18, 2021

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி என்னுமிடத்தில் அக்டோபர் 3 அன்று போராடும் விவசாயிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் குரூரமான தாக்குதல் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாகப் போரா டிக்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக, ஆட்சியாளர்களின் வன்முறை வெறி யாட்டங்கள் புதிய அளவிற்குச் சென்றுள்ளது. ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெறி, ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர், கேசவ் பிரசாத் மௌரியா என்பவர் வருகைபுரிய இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டி ருந்தார்கள்.



வயல்வெளிகளில் குதித்து தப்பி ஓடிய அசிஷ்மிஸ்ரா

துணை முதல்வர் வருகைபுரிய இருந்த இடத்திற்கு அருகில் விவசாயிகள் கூடியிருந்தார்கள். அஜய் மிஸ்ராவுக்குச் சொந்தமான கார் (இதில் அவ ருடைய மகன் அசிஷ் மிஸ்ரா இருந்தார்) மற்றும் அதற்குப் பாதுகாவலுடன் வரும் கார்கள் வரும் போது, அவை போராடிக்கொண்டிருந்த விவசாயிகள் மீது ஏறி, நால்வர் கொல்லப்படவும், விவசாய சங்கத் தலைவர் தெஜிந்தர் சிங் விர்க் உட்பட பலர் காயங்கள் அடையவும் அவை காரணமாக இருந்தன. அப்போது முன்னேறிச்செல்ல முடியாமல் கவிழ்ந்த போது அதற்குள்ளிருந்த நால்வர் அடித்து நொறுக் கப்பட்டு, உயிரிழந்துள்ளார்கள். சம்பவ இடத்தில் இருந்த விவசாயிகள் சம்பவம் நடந்தபோது எப்படி அசிஷ் மிஸ்ரா வயல்வெளிகளில் குதித்துத் தப்பித்து ஓடினார் என்பதற்குக் கண்ணால் கண்ட சாட்சிகளாக இருக்கிறார்கள். பாஜக ஆட்சியாளர்களின் கேவலமான முறையி லான இந்தத் தாக்குதல், வேளாண் சட்டங்கள் மீதும் அதற்கு எதிராக நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராகவும் மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் முரட்டுத்தனமாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய பின்னணியில் நடைபெற்றி ருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு, ஓர் இதழுக்குப் பேட்டி அளிக்கையில், பிரதமர் மோடி, வேளாண் சட்டங்க ளுக்கு சார்பாகப் பேசியதுடன், இதனை எதிர்ப்ப வர்களை “அறிவார்ந்த நேர்மையின்மை” (“intell ectual dishonesty”) என்றும், “அரசியல் ஏமாற்று” (“political deceit”) என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், போராடும் விவசாயிகளுக்கு எதிராகப் “பழிக்குப் பழி” வாங்கும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராகத் தடிகளை ஏந்த பல்வேறு பகுதிகளிலும் உள்ள ‘தொண்டர்கள்’ தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் பாஜக-வின் விவசாய முன்னணியின் கூட்டத்தில் உரை நிகழ்த்தியிருந்தார்.

லக்கிம்பூர் கெரி சம்பவத்தைப் பொறுத்த வரையிலும், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது வேளாண் சட்டங்களுக்கு எதிரா கப் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் விதத்தி லும் ஆத்திரமூட்டும் விதத்திலும் உரைநிகழ்த்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து ஒருசில தினங்க ளுக்குப்பின் விவசாயிகள் மீது இவ்வாறான தாக்குதல் நடந்திருக்கிறது. விவசாயிகள் இயக்கம் எவ்விதத் தொய்வுமின்றி தொடர்வதும், அது நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதும் அதனைத் தங்களால் சீர்குலைக்க முடியவில்லையே என்ற விரக்தியும்தான் பாஜக அமைச்சர்களையும், தலைவர்களையும் இவ்வாறு விரக்தியுற்ற தொனியுடன் அறிக்கைகளை வெளியிட வைத்திருக்கிறது.

அரியானாவில் நடந்த அராஜகம்

முன்னதாக, அரியானாவில், கர்னால் அருகே டோல் பிளாசாவில் கிளர்ச்சியாளர்கள் மீது மிகவும் கடுமையான முறையில் காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவத்திற்குப் பின்னர் கட்டார் சற்றே அடக்கி வாசிக்க வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட காயங்களினால் ஒரு விவசாயி இறந்துவிட்டார். இந்தச் சம்பவத்திற்கு முன்பு, அந்தப் பகுதியைச் சேர்ந்த கோட்டாட்சியர் அயுஷ் சின்கா, “காவல்துறையினரின் தடுப்பரணைத் தாண்டி வர முயற்சிக்கும் விவசாயிகளின் மண்டைகளை உடை யுங்கள்” என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டி ருந்தார். இந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வுக்குப் பின்னர் சம்யுக்த கிசான் மோச்சா (எஸ்கேஎம்) தலைமை யின்கீழ் உள்ள விவசாயிகள் கர்னாலில் இருந்த சிறிய தலைமைச் செயலகத்தை (mini secretariat) முற்று கையிட்டனர். நான்கு நாட்களுக்குப்பின்னர் நிர்வாகம் பணிந்தது. காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், இறந்த விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும், அவரது குடும்பத்தி னருக்கு வேலை அளித்திட வேண்டும் மற்றும் தடித்த னமாகப் பேசிய அதிகாரி, சின்கா, விடுப்பில் அனுப் பப்பட வேண்டும் என விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

லக்கிம்பூர் கெரி சம்பவத்திற்குப் பின்னர், ஆயிரக்க ணக்கான விவசாயிகள் சம்பவ இடத்தில் திரண்ட னர். இதனைத் தொடர்ந்து விவசாய சங்கங்க ளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர், அவர்களின் முக்கியமான கோரிக்கைகளில் சிலவற்றை உத்தரப்பிரதேச நிர்வாகம் ஒப்புக் கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அமைச்சரின் மகனின் பெயரைக் குறிப்பிட்டு கொலைக் குற்றங்களுடன் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும். இதற்கு விவசாய சங்கத் தலைவர்களிடம் நிர்வாகம் ஏழு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறது. இறந்த வரின் குடும்பத்தினருக்கு 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும், காயங்கள் அடைந்த வர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும் என்பவை மற்ற கோரிக்கைகளாகும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்தி ருந்தது. இவற்றை அடுத்து காவல்துறையினர் பார பட்சமற்ற விதத்தில் புலன் விசாரணை நடத்து வார்களா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியி ருக்கிறது.

இழிவான வழிகளில் நசுக்கும் முயற்சி

அரசு எந்திரம் ஏதேனும் ஒருவிதத்தில் காவல்துறை யினரைப் பயன்படுத்தியோ அல்லது இதர இழிவான வழிகளிலோ விவசாய இயக்கத்தை நசுக்க விரும்பு கிறது. அந்தச் சமயங்களில் எல்லாம் விவசாயிகள் அவற்றுக்குத் தக்க பதிலடி கொடுத்து வரு கின்றார்கள். ஜனவரி 26 அன்று தில்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற்ற நிகழ்வுக ளுக்குப்பின் இதுதான் போராட்ட வடிவமுறையாக இருந்து வருகிறது. ஆதித்யநாத் அரசாங்கம் மக்கள் மீது அதீதமான அடக்குமுறைக்கும், காவல்துறையினரின் அத்து மீறல்களுக்கும் பேர்போன ஒன்றாகும். சம்பவம் நடை பெற்றதற்குப்பின்னர் அடுத்த நாள், லக்கிம்பூர் கெரி செல்வதற்கு முயற்சித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் அல்லது சிறைப்படுத்தப்பட்டார்கள். மாநிலத்தின் பல பகுதி களில் இந்தச் சம்பவத்தினைக் கண்டித்து அமைதி யான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவ தற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர், அதுவும் உள்துறை விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர், இத்தகைய வன்முறை நிகழ்வு நடத்து வதற்காக ஆத்திரமூட்டும் விதத்தில் உரை நிகழ்த்தி யிருப்பதாலும், அந்த சம்பவத்தில் அவருடைய மகனே சம்பந்தப்பட்டிருப்பதாலும், பிரதமரும், ஒன்றிய அரசாங்கமும் அந்த நபரை அவரது பதவியிலிருந்து அகற்றுவது குறைந்தபட்ச அடிப்படைக் கடமையா கும். ஆனால் இது நடைபெறவில்லை. பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விசாயிகள் குறித்து கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அதன்பின்னர் இரண்டு நாட்கள் கழித்து பிரதமர் லக்னோ சென்றிருந்த சமயத்தில் இந்தச் சம்பவம் குறித்துக் குறிப்பிடக்கூட இல்லை. லக்கிம்பூர் கெரியில் போராடும் விவசாயிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது ஆளும் கட்சியி னரின் விரக்தியின் வெளிப்பாடேயாகும். இத்தகைய வன்முறைகள் மூலமாக போராடும் விவசாயிகளைப் பணிய வைத்திட முடியாது.

origin people democracy,
தமிழில்: ச.வீரமணி

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *